திருவாடானை திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் திருவாடனை நகர் முழுவதும் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடத்திட்டமிட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக நேற்று பேருந்துநிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் வாயில் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் முகமது முக்தார் திமுக மக்கள் பிரதிநிதி கதிரவன் ரத்தினம் திருவாடானை ஊராட்சி வார்டு.மகாலிங்கம் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை திமுக நகர செயலாளர் எல்ஐசி பாலா ஏற்பாடு செய்திருந்தார்.