• Sun. Mar 26th, 2023

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த 23 மீனவர்கள் கைது!..

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்களும் நேற்று முன்தினம் காலை நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மீனவர்களுக்கு கொரனா பரிசோதனை செய்யப்பட்டு தற்சமயம் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகை மீனவ கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *