• Tue. Dec 10th, 2024

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!..

டீசல் விலை உயர்வு, இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு மீனவர்களும் பிரச்சனை இல்லாமல் வாழ்வதற்கு மத்திய மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து, பிரச்சினை இல்லாமல் மீன் பிடிப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும். அதே போல இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பின்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் அங்கு சேதமடைந்த 150 அந்த படகுகளுக்கு முந்தைய தமிழக அரசு 19 படகுகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கியது. அதுபோல தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு உடனே 10 லட்ச ரூபாய் வழங்கி குடும்பங்களையும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வந்து மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் ஏராளமான மீனவர்கள் பேருந்து நிலையம் எதிரே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.