தேவையான பொருட்கள்:
பதப்படுத்தப்பட்ட சோளம் : 1 டப்பா, வெஜிடபிள் ஸ்டாக் : 1 லிட்டர், வெண்ணைய் : 1 மேஜைக்கரண்டி, பால் : 1 கப், முட்டை : 1, அஜினோ மோட்டோ : 1ஃ2 தேக்கரண்டி, மிளகுத்தூள் : 1 தேக்கரண்டி, மைதா மாவு : 1 மேஜைக்கரண்டி, உப்பு : தேவையான அளவு
செய்முறை:
வெண்ணையை அடுப்பில் வைத்து உருக்கிக்கொள்ளவும். வெண்ணைய் உருகியவுடன், மைதா மாவு சேர்த்து 1 நிமிடம் வரை வறுக்கவும். பிறகு பால் சேர்க்கவும். பின்னர் அதனுடன் டப்பியில் உள்ள மக்காச் சோளத்தையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் (காய்கறி வேகவைத்த தண்ணீர்) சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். சூப் இரண்டு கொதி வந்தவுடன் தேவையானால் முட்டை சேர்க்கவும். முட்டையை உடைத்து மெதுவாக விடவும். சூப்பை சுமார் 10 நிமிடம்வரை கொதிக்க விட்டு சூப்பை வடிகட்டாமல் சூடாகப் பரிமாறவும்.