• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜவ்வரிசி புலாவ்

Byவிஷா

May 2, 2022

தேவையானவை:
ஜவ்வரிசி – ஒரு கப், தக்காளி – 1, தேங்காய் துருவல் _ அரை கப், சீரகம் – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 1, பீன்ஸ்-கேரட் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – சிறிதளவு, மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப. செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்றாக, கெட்டியாக அரைக்கவும். அதை வடிகட்டி, அந்த சாறில் ஜவ்வரிசியை 20 நிமிடம் ஊற விடவும். (சாறு கெட்டியாக, ஜவ்வரிசி மூழ்கும் அளவு இருந்தால் போதும்).
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி, தேவையான உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதங்கியதும், ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி, நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்கவும். இதை சூடாக சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும்.