

தேவையானவை: பிஸ்தா – 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் – முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள், சர்க்கரை – 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 2.
செய்முறை: பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம் ஊறவிட்டு, மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, பிஸ்தா எசென்ஸ், மீதமுள்ள பால் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு பரிமாறவும்.
