• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வைரலாகும் சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்!

கோலிவுட்டில் பாணா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட்டில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.. சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். விவாகரத்திற்கு பின் சமந்தா தனது பிறந்தநாளை இரவு நெருங்கிய நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.