• Sun. Oct 6th, 2024

சின்ன கவுண்டர் பட வில்லன் சர்க்கரை கவுண்டர் காலமானார்

சில பாலிவுட் மற்றும் பிறமொழி படங்கள் தவிர பல தமிழ் படங்களில் நடித்த மூத்த நடிகர் சலீம் கவுஸ், இன்று தனது 70-வது வயதில் காலமானார். திறமையான நடிகராக கோலிவுட்டில் அறியப்படும் இவர், கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படத்தில் ஜிந்தா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

2010-ல் இந்தியில் வெளியான ‘வெல் டன் அப்பா’படத்துக்குப் பிறகு, ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. இயக்குனர் நாஞ்சில் இயக்கியுள்ள திரில்லர் படமான ‘கா – தி ஃபாரஸ்ட்’ படத்தில் ஆண்ட்ரியா வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞராகவும், சலீம் கவுஸ் வனவிலங்கு காப்பாளராகவும் நடித்துள்ளனர்.

‘சின்ன கவுண்டர்’, ‘திருடா திருடா’ போன்ற படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானாலும், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வேதநாயகமாக நடித்து ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார் சலீம்.

பரதன் இயக்கிய கிளாசிக் மலையாளத் திரைப்படமான ‘தாழ்வாரம்’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இவர், ஷாருக்கான் மற்றும் மாதுரி தீட்சித்தின் ‘கொய்லா’, ‘சாரன்ஷ்’, ‘முஜ்ரிம்’, ‘ஷபத்’, ‘சோல்ஜர்’, ‘ஏகேஎஸ்’ மற்றும் ‘இந்தியன்’ உள்ளிட்ட பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அதோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் சலீம் கவுஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *