• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Apr 18, 2022

மீன் கபாப்:

தேவையான பொருட்கள் :
துண்டு மீன் – அரை கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1, வினிகர் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை :
வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும். பின்பு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோள மாவு, வெங்காய பேஸ்ட், உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான மீன் கபாப் ரெடி.