தேவையானவை:
வெங்காயம், கேரட் – தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் – 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது – தலா ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப், கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான பிரெட் பணியாரம் தயார்.
பிரெட் காரப்பணியாரம்:
