• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 17, 2022

காலிஃப்ளவர் 65:

தேவையான பொருட்கள்
பெரிய காலிபிளவர் – 1, சோளமாவு – 4 கப், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, மைதா – 2 ஸ்பூன்
செய்முறை:
காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். பிறகு அகலமான பாத்திரத்தில் காலிபிளவரை போட்டு அதன் மீது சோளமாவு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் காலிபிளவரை போட்டு பொறித் தெடுக்கவும். மொறு மொறுப்பான காலிஃப்ளவர் 65 தயார். கொத்துமல்லி தூவி பரிமாறவும்.