• Wed. Nov 25th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பல்வேறு பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார்ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Nov 25, 2026

மதுரை மாநகராட்சி, மண்டலம்-1ல் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பிரியா உடனிருந்தார்.
இந்த ஆய்வின்போது, ஆணையாளர் அவர்கள், மண்டலம்-1, கற்பகம் நகரில் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஈரக்கழிவு குப்பைகளை உரமாக்கும் விதம் தொடர்பாகவும், மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பொதுமக்களிடம் குப்பைகளை சேகரிக்க வரும் பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாகவும், குப்பைகள் பெறுவதற்காக தங்கள் பகுதிகளுக்கு வரும் வாகனங்களில் மட்டுமே குப்பைகளை தர வேண்டும் என்பது தொடர்பாகவும், குப்பைகளை வேறு இடங்களில் கொட்ட கூடாது என்பது தொடர்பாகவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, ஆணையாளர் அவர்கள், மண்டலம் 1, வார்டு 10, கற்பக நகர் 3வது தெருவில் செயல்பட்டு வரும் கழிவு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, ஆணையாளர் , தபால்தந்தி நகரில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டு, நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும் பகுதிகள், நேரம் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டதுடன், அல்அமீன் நகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்று நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, தபால்தந்தி நகரில் செயல்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பசுமையை போற்றும் வகையில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

இந்த ஆய்வுகளின் போது, துணை ஆணையாளர் சுகன்யா , உதவி ஆணையாளர் மணிமாறன் , நகர திட்டமிடுநர் முரளி, உதவி செயற்பொறியாளர் காமராஜ், நகர்நல அலுவலர் மரு.அரவிந்த்ஜோதி , உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.