• Mon. Jan 20th, 2025

தள்ளுபடி விலையில் டயர் விற்பனை- போலி விளம்பரம்.., பல லட்ச ரூபாய் மோசடி…

ByKalamegam Viswanathan

Jan 10, 2025

மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் மதுரை சுந்தர் டயர்ஸ் என்னும் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு மோசடி கும்பலானது டயர் நிறுவனத்தின் பெயரை போலியாக முகநூல் பக்கத்தை துவங்கி அதில் டயர் மேலா 2024 அதிரடி தள்ளுபடி விற்பனை என விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி பலர் அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு டயர் தேவை என தெரிவித்துள்ளார்கள். அப்பொழுது இவர்கள் அனுப்பிய QR கோடில் பணம் செலுத்தினால் தங்களுக்கு நேரடியாக டோர் டெலிவரி செய்யப்படும் என விளம்பரம் செய்துள்ளார்கள். இதனை நம்பி பலர் 2000, 3000 என அனுப்பிய யுபிஐ ஐடியில் பணத்தை செலுத்தி உள்ளார்கள். மேலும் அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக போலியான பில்களை தயாரித்து வாடிக்கையாளர்கள் அனுப்பி வைத்தது தங்களுக்கு டயர் இரண்டு நாட்களில் வந்து விடும் என தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் கடந்தும் டயர் வராக அதை கண்டு அவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது செல் சுவிட்ச் ஆப் ஆக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போன சில வாடிக்கையாளர் நேரடியாக கடைக்கு வந்து சார் நாங்கள் இதுபோன்று பணம் செலுத்தி உள்ளோம் என எங்களுக்கு டயர் வரவில்லை என தெரிவித்துள்ளார்கள். அப்பொழுதுதான் தெரிய வந்தது. இது போன்ற விளம்பரங்கள் நாங்கள் எதுவும் செய்யவில்லை என நிறுவனத்தின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்கள் பல பேரிடம் அளவு லட்சம் ரூபாய் வரையில் மோசடியின் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தெரிவித்த பிறகு டயர் நிறுவனம் சார்பாக, இது குறித்து மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த மதுரை சைபர் கிரைம் இமோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.