• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய எஸ்.பி. செல்வராஜ்..,

ByPuthar Pandian P

Mar 14, 2026

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும் வசிக்கும் மாணவர்கள், இளைஞர் களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் உட்பட 31 வகையான பொருட்கள் வழங்கு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் எஸ்.பி. செல்வராஜ் தலைமை தாங்கி விளையாட்டு உபகரண பொருட்களை மாணவர்கள், இளைஞர்களுக்கு வழங்கினார். துணைத் தலைவர் விமல் குமார் முன்னிலை வைத்தார்.

இந்த விழாவில் கவுன்சிலர்கள் மாரியப்பன்,முகமது நசீர், கருணாகரன், ஜெயராஜ், மீனாட்சி, தேவி, செல்வி, முத்துலட்சுமி,மேரி, காசியம்மாள், மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் அசோக்குமார், தி.மு.க. பிரமுகர்கள் ரவி, திருமுருகன், டேவிட், சதீஸ்குமார், அம்மையநாயக்கனூர்பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் , கலந்து கொண்டனர்.