• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அரசு பஸ் டயர் வெடித்து பெரும் விபத்து தவிர்ப்பு!!

ByPuthar Pandian P

Mar 14, 2026

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மெட்டூர் மேம்பாலத்தில் வந்தது. அப்போது திடீரென பஸ் முன் சக்கரத்தில் உள்ள டயர் வெடித்து சிதறியது. சாலையில் 300 மீட்டர் தூரத்திற்கு பஸ் சென்று நின்றது.
அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்தவர் ராஜா வயது 50 என்பவர் டயர் வெடித்தவுடன் சாமர்த்தியமாக பஸ்சை நிலை தடுமாறாமல் நிறுத்தினார்.

இதனால் பயணி இந்த பஸ்ஸில் பயணம் செய்த கண்டக்டர் செல்வாஜ் மற்றும் 40 பயணிகள் இருந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ்சில் டமார் என்ற சத்தம் கேட்டு வெடித்ததால் உள்ளே இருக்கும் பயணிகள் படபடத்துப் போய் அலறி பதட்டம் அடைந்தனர்.
அதன் பிறகு வேறு பஸ்சுகளில் சில பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அப்போது பஸ் பயணிகள் நம்மிடம் கூறுகையில்,
டமார் என்று சத்தம் கேட்டதும், அலறி பதற்றத்துடன் இருந்தோம். பஸ் நின்ற பிறகு கீழே இறங்கி பார்த்த போது பஸ் டயர் துண்டு துண்டாக சிதறி சாலையில் கிடந்தது. பஸ் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தி விட்டார். கடவுள் அருளால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என பதற்றத்துடன் கூறினார்கள். போக்குவரத்து சீர்படுத்தும் பணியில் அம்மையநாயக்கனூர் ரோந்து வாகன போலீசார், தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடி ஊழியர் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது