• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு..,

ByPuthar Pandian P

Mar 13, 2026

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வத்தலகுண்டு பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேகா மற்றும் வளர்மதி தலைமையில் இப்பேரணி நடைபெற்றது.

நிலக்கோட்டை டி.எஸ்.பி இளஞ்செழியன் முன்னிலையில், 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

வத்தலகுண்டு காளியம்மன் கோவிலில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக மஞ்சள் ஆற்று பாலம் வரை அணிவகுப்பு நடைபெற்றது.

இதேபோல் நிலக்கோட்டை ,பழைய வத்தலகுண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி கிராமப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் அணிவகுத்துச் சென்றனர்.