• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,

Byமுகமதி

Aug 6, 2026

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் மாவட்ட துணை தலைவர்கள் ஆலங்குடி தமிழ்ச் செல்வன் பழனிசாமி பாலாண்டார் செம்பை மணி வேங்கை அருணாசலம் எம் ஏ எம் தீன் சிவக்குமார் வீ. தமிழ்ச் செல்வன் மாநகர தலைவர்கள் மதன் கண்ணன் பாரூக் ஜெய்லானி வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன் கறம்பக்குடி வீரையா தங்கசிவா கீரனூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பவுல் ராஜ் குன்றாண்டார்கோவில்சண்முகம் வீசா. இ. விஜி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மகாபலிபுரத்தில் நடத்திய மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற மக்களவை எதிர்கட்சி தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் புதுக்கோட்டை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி பெயர் சூட்ட வேண்டும் எனவும் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் புதிதாக உண்டு உறைவிடப் பள்ளி அமைத்திட தமிழக நிதி நிலை ( பட்ஜெட்)

அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து காமராஜர் அவர்களுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி தெரிவித்தும் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் ( பட்ஜெட்) காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக நன்றி தெரிவித்தும் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தின் பணிகளை விரைந்து செயல்படுத்த கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது..