• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகையும், ரூபாய் 122.51 கோடியில் மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்றும் ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்கு ரூ.203.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடும்.

வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில் என்ற அடிப்படையில் ஒவ்வொரு உழவருக்கும் AI அடிப்படையிலான உழவர் செயலி; இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடும்

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடும்செய்யப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் ரூ.27.21 கோடி ஒதுக்கீடும்.

எல் நினோ காரணமாக 12 மாவட்டங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.