• Tue. Mar 19th, 2024

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமனம்

ByA.Tamilselvan

Sep 30, 2022

சென்னை ஐகோர்ட்டின் 33-வது தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் பதவி ஏற்க உள்ளார்.
1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி பிறந்த நீதிபதி எஸ். முரளிதர், ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ளார். நீதிபதி எஸ். முரளிதர் வழக்குரைஞராக 1984-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந்தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டு, தனது வக்கீல் பணியை சென்னையிலுள்ள சிவில் நீதிமன்றங்களில் தொடங்கி, டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளை நடத்தியுள்ளார். டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2006-ம் ஆண்டு மே 29-ந்தேதி நியமிக்கப்பட்டார். பின்னர் நிரந்தர நீதியாக 2007-ம் ஆண்டு, ஆகஸ்டு 29-ந்தேதி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். 1970-களுக்கு பின்னர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவரான, தமிழ்மொழி தெரிந்தவரான எஸ்.முரளிதரை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *