• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் க்கு அதிர்ச்சி- உச்சிநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

ByA.Tamilselvan

Sep 30, 2022

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அமர்வு ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் “அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு எதிரான பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்கவும் இபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இடைகால பொதுச்செயலாளராக உள்ள இபிஎஸ்சை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கும் திட்டத்திற்கு இந்த உத்தரவு மூலம் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ்.