• Tue. Mar 19th, 2024

நாளை 5 ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ByA.Tamilselvan

Sep 30, 2022

பிரதமர் மோடி நாளை 5 ஜி சேவையை டெல்லியில் உள்ள பிரகதி மைதனாத்தில் தொடங்கி வைக்கிறார்.
சமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது. நாட்டில் 5 ஜி சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அதை பிரதமர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 “புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 5 ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *