ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்தப் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும் அவரது ஆயுள்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிவருகின்றன. .
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்திவருகிறது. புதினுக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பும்,கண்டனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘புதினுக்கு என்ன நோய் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூஸ்லைன்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளதகவலின்படி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உத்தரவிடுவதற்கு முன்ன தாக, ரத்தப் புற்றுநோய்க்காக புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவருகின்றன..மேலும் புற்றுநோயின் தாக்கத்தால் புதின் இன்னும் 3 ஆண்டுகளே உயிருடன் இருப்பார் என்றும் அதிர்ச்சி தகவல்களை மேற்கண்ட அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது கேள்விக்குறிதான். தற்போதைய உக்ரைன் மீதான போர் காரணமாக புதின் மீது இதுபோன்ற வதந்திகள் பரபரப்ப படுகிறதா என்பது தெரியவில்லை.
ரஷ்ய அதிபர் புதின் ஆயுள்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே- அதிர்ச்சி தகவல்
