• Thu. Apr 18th, 2024

பலத்த பாதுகாப்புடன் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை!..

Byமதி

Oct 12, 2021

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது.

6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9-ம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக 9 மாவட்டங்களில் 74 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இந்த ஓட்டு எண்ணும் மையங்களை அமைத்து இருக்கிறார்கள். பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *