

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நம்பியூர் வட்டார தலைவர் அருண் டேனியல் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சித்துறை ஊழியர் விரோத போக்கினை கைவிட வேண்டும். இரவு நேர மற்றும் விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தக்கூடாது, பயனாளி சார்ந்த திட்டங்களில் ஊழியர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் தண்டனைகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

