• Thu. Apr 25th, 2024

ஆறு விருதுகளை அள்ளி குவித்த படம் ருத்ரா!

ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் ருத்ரா – சுபிக்ஷா நடித்துள்ள ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை “சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை கேட்கும் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை தரும் நாயாகியாக சுபிக்ஷ நடித்துள்ளார். மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்

படம் பற்றி நாயகன் ருத்ரா கூறியதாவது…

நாயகன் கதிர் (ருத்ரா ) ஆடியோ கிராபியில் கோல்ட் மெடலிஸ்ட், குடும்ப சூழ்நிலை காரணமாக தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறான். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஸ்ருதி ( சுபிக்ஷா ) ஒரு ஆடியோ டாக்குமெண்டரிக்காக வனப்பகுதிக்கு வர அவளுக்கு உதவி செய்ய, கதிர் நியமிக்கப்படுகிறான். ஒலிப்பதிவுக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.


அவள் அவனது திறமையை அங்கீகரிக்க மறுக்கிறாள். ஆனால் அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை சமாளித்து தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக்கொடுக்கிறான். அந்த டாகுமெண்ட்ரி பல விருதுகளை அவளுக்கு பெற்றுத்தர அதற்கு தகுதியானவன் கதிர் என்பதை உணர்கிறாள். தொடர்ந்து, BBC க்காக ஆடியோ டாக்குமெண்ட்ரி செய்யவரும் டேவிட் ஸ்ருதியை நாட அவள் தன் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கதிரை சாமர்த்தியமாக பேசி உதவிக்கு அழைக்கிறாள்.

அவளின் ஆசை வார்த்தைகளை உண்மை என்று நம்பும் கதிர் அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். ஸ்ருதி ஒரு சந்தர்ப்பவாதி, கதிரை வைத்து தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்த டேவிட் கதிரை தனியாக சந்தித்து அவளைப்பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து இனியும் அவளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறார். ஸ்ருதியின் சுய ரூபம் என்ன, கதிரின் காதல் என்னவாயிற்று என்பதற்கு பதில் திரையில் கிடைக்கும் என்கிறார் நாயகன் ருத்ரா.


கதையின் நாயகன் அறிமுகமாகும் காட்சியில் தேனீக்களின் ஓசையை பதிவிடுவதற்காக சுமார் 200 உயர மரத்தில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் எடுத்துக்கொள்ளாமல், டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.. மயிர் கூச்செரியும் அச்சம்பவம் திரையில் பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கும்.


படத்தின் ஒரு முக்கியமான காட்சி அருவியின் அருகே படமாக்கப்பட்டது.. கதானாயகன் ருத்ராவுடன் நாயகி சுபிக்‌ஷா பங்குகொள்ளும் காட்சி, அருவியின் சத்தத்தை பதிவு செய்ய நீர் பாய்ந்தோடும் பாறைகளில் ரிக்கார்டிங் சாதனங்களுடன் செல்லும் போது வழுக்கி விழுந்து கதானாயகனுக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது, அதனால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாமல் காட்சி செவ்வனே நிறைவேற தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தந்த ருத்ராவின் ஈடுபாட்டை பாராட்டியே ஆக வேண்டும் என்றாரவருகின்ற 24 ம் தேதி THREE FACE Creations பட நிறுவனம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்.சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை ” படம் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 6 விருதுகளை பெற்றிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *