• Mon. Mar 27th, 2023

அதிமுகவின் கண்டன ஆர்பாட்டம் திமுகவை ஆட்டம் காண்பிக்குமா..?

Byகாயத்ரி

Dec 17, 2021

திமுக தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக இன்று கண்டன ஆர்பாட்டங்கள் நடத்த போவதாக அறிவித்து இருந்தது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பழனிசாமி கூறி இருந்தனர். இந்த அறிவிப்பின்படி, 75 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியது. இதில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் பரிசுத்தொகையை அறிவிக்க வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டது.
திமுக சட்டமன்ற தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அம்மா மினி கிளினிக்கை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்க வேண்டும். தோ்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்ட தொண்டா்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டம் திமுகவிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா?
திமுகவின் பாதை சரி தானா?
திமுக இதனை எதிர்கொள்ளுமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *