• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ரூ 95,000 கரண்ட்பில்.. கூலித்தொழிலாளிக்கு அதிர்ச்சி

ByA.Tamilselvan

Sep 8, 2022

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ரூ95,000 கரண்டபில் வந்ததால் அதிரச்சியடைந்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரேவண்ணா என்றகூலித்தொழிலாளி ,பல ஆண்டுகளாக தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்திவந்துள்ளார். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக அவரது வீட்டுக்கு மின் கட்டணமே வராமல் இருந்துள்ளது. நேற்று அவரது மொபைலுக்கு ரு94,985 மின் கட்டணம் செலுத்தவேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த ரேவண்ணா இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.