• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவை ஸ்ரீஅபிராமி கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா..,

BySeenu

Aug 12, 2026

கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

தலைமை விருந்தினராக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சி மன்ற பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம் பங்கேற்றார்.

விழாவில்,ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்களான மருத்துவர்கள் குந்தவி தேவி, செந்தில் குமார், பாலமுருகன்,உமாதேவி,சுசரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

விழாவில்,அபிராமி கல்வி நிறுவனங்களுகளின் செவிலியர் கல்லூரி,மருந்தியல் கல்லூரி, தொழில் சார் சிகிச்சை கல்லூரி,பிசியோதெரபி,மற்றும் இணை சுகாதார அறிவியல் ஆகிய கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுகலை பயின்ற மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது..

விழாவில் பேசிய, தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவர் மற்றும் முன்னாள் இஸ்ரோ திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு குழுவாக இணைந்து பணியாற்றுதல் என்ற கொள்கையை தான் கடைப்பிடித்ததாகவும் வெற்றியை அடைவதற்கு கற்றல் மற்றும் கடின உழைப்பு மிகவும் அவசியம் என தெரிவித்தார் தொழில்முறை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கு தொடர்ந்து கற்றுக் கொள்வதும் உழைப்பதும் முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தினார்

தொடர்ந்து பேசிய , தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சி மன்ற பதிவாளர் டாக்டர் சங்கர் சண்முகம்,தற்போது செவிலியர் துறையில் சர்வதேச அளவில் இந்திய செவிலியர்களின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்..

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள், ரேணுகா, தட்சிணாமூர்த்தி, நரேஷ்பாபு, ஜெயபாரதி, மணிமேகலை உட்பட துறைதலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்…