• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சந்தன மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா..,

ByRadhakrishnan Thangaraj

Aug 12, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ காலனியில் அமைந்துள்ள அனைத்து சமுதாயத்திற்கு பாதிக்கப்பட்ட அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவில் ஆடித்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. எட்டாவது நாள் இரவு அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி, பால்குடம் எடுத்து பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

ஒன்பதாவது நாள் அதிகாலை கோவில் பூசாரி கரகம் எடுத்து வர அதை தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குளியில் கோவில் மருளாடி கரகம் எடுத்து முதலாவதாக பூக்குழி இறங்கினார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

விழா ஏற்பாடுகளை சந்தன மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் தலைவர் ராஜேந்திரன் செயலாளர் அழகுராஜ் பொருளாளர் பாண்டியன் மற்றும் கௌரவ ஆலோசகர் கண்ணன் கோவில் பூசாரி திருஞானசம்பந்தம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.