தயாரிப்பு – ரா ஸ்டுடியோஸ்
இயக்கம் – அருண் மாதேஸ்வரன்
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு-S. கிருஷ்ணன்
படத்தொகுப்பு-நாகூரான்
நடிப்பு – வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், பூராமு, ஜெயக்குமார்
வெளியான தேதி – 23 டிசம்பர் 2021
நேரம் – 2 மணி நேரம் 9 நிமிடம்
ராக்கிஇந்தப் படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா படைப்பாளிகள், ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் சுப்பிரமணியபுரம் படத்தில் சமுத்திரகனி கழுத்தை ஆட்டோவில் வைத்து அறுக்கும் காட்சி வன்முறையின் உச்சம் என்றார்கள் ஆனால் அந்தக் காட்சி திரைக்கதையுடன் பொருந்திப்போனது
ராக்கி படத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக மரத்தை அறுப்பது போன்று அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிருந்தால் முழுப் படமும் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
சிறையில் இருந்து பதினேழு வருடங்கள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி வரும் ராக்கி (வசந்த் ரவி), தன் தாய் மல்லியையும் (ரோகிணி) தங்கை அமுதாவையும் (ரவீணா ரவி) தேடுகிறான். ஆனால், தாய் கொல்லப்பட்டிருக்கிறாள். தங்கையைக் காணவில்லை. ராக்கி வெளியே வந்த தகவல் அறிந்ததும் பழைய விரோதி மணிமாறன் (பாரதிராஜா) கதாநாயகனை பழிவாங்கத் துடிக்கிறார்.
இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை தமிழ்சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தப்படாத வண்ணம் ரத்தம் கொப்பளிக்க கொப்பளிக்க பார்வையாளனுக்கு கடத்துவதுதான் ‘ராக்கி’.படத்தின் துவக்கத்தில் நாயகன் சிறையில் இருந்து விடுதலையானபின் திரையில் விரியும் காட்சிகள் தொடர்ந்து வரும் காட்சிகள், ‘கலைப்’ படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், படம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்கும்போது புதுவகையான உணர்வை ஏற்படுத்துகிறது.கதை என்று பார்த்தால், ஒரு கடத்தல் கும்பல், அவர்களுக்குள் நடக்கும் மோதல், பழிவாங்கல் என்ற தமிழ் சினிமாவின் அரதப்பழசான திரைக் கதைதான். ஆனால், அதனைப் படமாக்கியிருக்கும் விதத்திலும் கதையைச் சொல்லியிருக்கும் விதத்திலும் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்அருண் மாதேஸ்வரன்.
ஒரு திரைப்படத்தில் ‘நான் லீனியர்’ பாணியில் கதை சொல்வது வழக்கமானதுதான். ஆனால், இந்தப் படம் ஒரு நான் – லீனியர் நாவலைப் படிப்பதைப் போல அமைந்திருக்கிறது. சில தருணங்களில் ஒரு கவிதையைப் படிப்பதைப் போல இருக்கிறது. ஒரே காட்சியில் அத்தனை அடுக்குகள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் கொப்புளித்து வழியும் ரத்தத்தின் நாற்றம் படம் முழுக்கவீசுகிறது.
இந்தக் கதையின் முக்கியமான முடிச்சுகள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ஃப்ளாஷ் – பேக் மூலம் அவிழ்ந்துகொண்டே வருவது சிறப்பாக இருக்கிறது.படத்தின் கடைசிக் காட்சிவரை பார்வையாளனை பதட்டத்தில் வைத்து ஆச்சரியத்தைத் தக்கவைக்கிறார் இயக்குநர்.
ராக்கி படத்தில் காட்டப்படும் வன்முறை, கொடிய, கொடூர மனம் கொண்டவர்களால் கூட சகித்துக்கொள்ள முடியாதவை. சுத்தியலால் மண்டை ஓடு நொறுங்கும்வரை அடித்துக் கொல்வது, குத்தூசியால் குத்திக் கொல்வது, ஆணியால் கண்களில் குத்துவது, சடலத்தை வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றுவது, குடலை உருவி மாலையாகப் போடுவது என வன்முறையை ரசித்து ரசித்து வன்முறைகளின் பேரரசனாக தன்னை பாவித்துக்கொண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
பார்க்க பார்க்க புடிக்கும் என்கிற சிவாஜி படத்தின் வசனம் போன்று
படம் பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளனுக்குஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல இந்த வன்முறை காட்சி பழக்கப்பட்டுவிடுகிறது இன்னும் கொஞ்சம் கூடுதல் வன்முறை காட்சி வராதா என மனம் எதிர்நோக்குகிறது.
நாயகனாக வரும் வசந்த் ரவியின் முகத்தில் பெரிய உணர்ச்சிகள் தென்படுவதில்லை. ஆனால், பாத்திரத்திற்கு பொருத்தமான நபராகவே இருக்கிறார். மணிமாறனாக வரும் பாரதிராஜா, கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவைப் போலவே தூள் கிளப்புகிறார் தன் மகனை வழிக்குக் கொண்டுவர துருப்பிடித்த பிளேடால், விரலை நறுக்கச் சொல்லும் காட்சியில், அவர் குரலை உயர்த்தும்போது திரையரங்கே அமைதியாகிவிடுகிறது.
இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் Old Boy போன்ற பல திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. முதலில் செய்த ஒரு கொலைக்காக பல ஆண்டுகள் சிறியிலிருந்துவிட்டு வரும் நாயகன், வெளியில் வந்ததும் கொடூரமாக பல ஆட்களைக் கொன்று குவிக்கிறார். காவல் துறையே கண்ணில் படுவதில்லை. அதேபோல, ஒரே நபர் 20, 30 பேரை அடித்துத் துவம்சம் செய்வதும் சற்று அதீதமாகப்படுகிறது.
ஆனால், படத்தின் உச்சகட்ட காட்சி இருக்கிறதே, அந்தக் காட்சி இந்தக் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது. அந்த ஒரு காட்சியில்தான் எத்தனை விஷயங்கள் தெரியவருகின்றன?
இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இணையாகப் பாராட்டத்தக்கவர், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார் அதேபோல, தர்புகா சிவாவின் இசை, காட்சிகளுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மிருதங்கம் ஒலிக்கிறது. வேறு பல காட்சிகளில் மௌனமே இசையாக அமைகிறது.
ராக்கி – வன்முறையின் அழகியல்
- மகளிர் காவல்துறை பொன்விழா நெல்லை வந்த சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்புதமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை […]
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
- பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு..!பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் […]
- மதுரையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படகண்காட்சிதமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை […]
- நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..!தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று […]
- ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைமதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.மதுரை விமான […]
- இன்னோசன்ட் காலமானார்இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்(27.03.2023) […]
- ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.இந்த இணையத் தொடரில் […]
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]