• Thu. Mar 30th, 2023

வலிமை படம் பார்க்க விரும்பும் பாஜக வானதி சீனிவாசன்

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் வலிமை. அவருடன் இந்திநடிகை ஹூமா குரோஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக்கும் வெளியிடப்பட்டது. 2022 ஜனவரி 14 அன்று வலிமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில், அஜித் நடித்துள்ள வலிமை படம் வெளியானதும் கண்டிப்பாக பார்ப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல படங்களை பார்ப்பது உண்டு. பெரும்பாலும் விமானத்தில் பயணிக்கும் போது படங்களை பார்ப்பேன்.

சமீபத்தில் சர்தார் உத்தம் என்ற படத்தை பார்த்தேன் ரொம்ப பிடித்து இருந்தது என்றும் வானதி சீனிவாசன் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலன் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை கூறி கட்சி வேட்பாளர்கள் வாக்குசேகரித்து வந்தனர் கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தேர்தலில் வெற்றி பெற்றால் அஜீத்குமார் நடித்து வரும் வலிமை பட அப்டேட் பெற்று வெளியிடுவேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *