சென்னை ஓட்டேரியில் டூவீலரில் சென்ற தம்பதிகள் மழையினால் சேதமடைந்த சாலையில் நிலைகுலைந்து கீழே விழுந்தனர்.
அப்போது தீடிரென பேருந்து அந்த பக்கம் வர, நல்வாய்ப்பாக பேருந்தின் அடியில் சிக்காமல் உயிர் பிழைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காண்போர் நெஞ்சங்களை நடுங்கச் செய்கிறது.