• Sun. Dec 1st, 2024

27 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Byமதி

Nov 10, 2021

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 21.5செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தற்போது வரை பல்வேறு இடங்களில் ஒரு சில பகுதியில் மழை பெய்து வருகிறது. திருவாரூரில் 18.5 செ.மீ., வலங்கைமானில் 12.2 செ.மீ. மன்னார்குடியில் 14 செ.மீ., தரங்கம்பாடியில் 15.8 செ.மீ. சீர்காழியில் 12.7 செ.மீ. மணல்மேடு பகுதியில் 12 செ.மீ. , கொள்ளிடத்தில் 11.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்மழை காரணமாக கள்ளக்குறிச்சி, கரூர், வேலூர் , நாமக்கல், ராணிப்பேட்டை, தேனி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விருதுநகர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்டுகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *