• Sat. Apr 20th, 2024

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோடு நந்தா கல்வி நிறுவ னங்கள், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு. சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்துக்கு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்மு கன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி முன்னிலை வகித்தார்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறை ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, மேட்டூர் ரோடு வழியாக சென்று வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது.

இதில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜரத்தினம், ஆர்.கே.கே.கார்த்திக், செயலாளர் தனபால் மற்றும் சேலம், கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நந்தா கல்வி அறக்கட் உளை செயலாளர் எஸ் நந்த குமார் பிரதீப், கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ். திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோர் தங்களது பாராட் டுகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *