கோபி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கே. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 35 லட்சம் மதிப்பில் வலசித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி,நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கரட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன் பாளையத்தில் ரூ 7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்டஅரசு நடுநிலைப் பள்ளியில் 24 லட்சத்தில் பள்ளி கூடுதல் கட்டிடம் பணிகள் தொடங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியின் கீழ் நிதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் கங்காதரன் எம் எம் செல்வம் திவாகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் மனோகர் திவாகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்டமூர்த்தி,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்