• Sat. Feb 15th, 2025

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; விக்கிரமராஜா எச்சரிக்கை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து வணிகர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க கங்களின் பேரமைப்பிம் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் தென் மண்டல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் முழுமையான தளர்வுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், சென்னை போன்று மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை விடுத்தார். மேலும் வ.உ.சி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு மணி மண்டபம் காட்டுவதாக அறிவித்தற்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து விரைவில் வணிகர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த விக்கிரமராஜா, பொது மக்கள் பாதிக்காத வகையில் பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். முந்தைய அதிமுக அரசு எந்த முடிவாக இருந்தாலும் தங்களை ஆலோசிக்காமல் முடிவு செய்வார்கள் ஆனால் தற்போதைய திமுக அரசு தங்களிடம் கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவு எடுப்பது வரவேற்கத்தக்கது” என கூறினர்.