ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நதி. இவருடைய மகன் மகேஷ்வரன், மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் வேலை பார்த்து வருகிறார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நண்பர் மாரீஸ்வரனுடன் வசித்து வரும், மகேஷ்வரனை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகேஸ்வரன் என்பவர் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார், அவருக்கு அருகிலேயே மாரீஸ்வரன் என்பவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரீஸ்வரனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.