• Tue. Mar 28th, 2023

குற்றாலத்திற்கு குளிக்கச் சென்ற 3 பேர் கோர விபத்தில் பலி!

By

Sep 4, 2021 ,

தென்காசி அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அமைந்துள்ள செக்போஸ்ட் மலை அடிவார வளைவில் திரும்பும் போது, நிலைதடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் மது பிரபு (24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற செல்லூர் 50 அடி ரோடு பகுதியைச் சேர்ந்த மன்சூரலிகான்(31), காரில் பயணித்த சுரேஷ் (30), மகேஷ் (28), அருண்குமார், வாசகமணி (30), பேச்சிமுத்து (25), ஜான் (29) ஆகிய 8 பேரும் படுகாயங்களுடன் சிவகிரி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மன்சூர் அலிகானும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி செய்தியாளர் – ஜெபராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *