• Thu. Apr 25th, 2024

*உயருகிறது ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் *

Byமதி

Dec 2, 2021

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை அடுத்தாண்டு முதல் ஏ.டி.எம். பரிவர்த்தனை மற்றும் ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து ரூ.25ஆக வசூலிக்கப்படும்.

அந்தந்த வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 5 முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் நகரங்கள் என்றால் 3 முறையும், ஊரகப் பகுதிகள் என்றால் 5 முறையும் கட்டணம் கிடையாது. அதன் பிறகு பணம் எடுத்தாலோ, இருப்பை பரிசோதித்தாலோ ஒரு பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி., உடன் ரூ.23.6 கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி இக்கட்டணத்தை ஜனவரி 1, 2022 முதல் ரூ.24.78 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது. அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *