• Sun. Sep 8th, 2024

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

Byகிஷோர்

Dec 2, 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா(45). இவர் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே கல்லூரியில் தேசிய மாணவர் படை ( NCC) அமைப்பை நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னிடம் படிக்கும் மாணவியை சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைது செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *