• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க கோரி..,உசிலம்பட்டி எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்..!

ByP.Thangapandi

Nov 22, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்.,
ஒரு வார காலத்திற்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உசிலம்பட்டி நகர் பகுதியில் கடையடைப்பு போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பேசினார்.