• Sun. Apr 28th, 2024

மதுரையில் தேவர் ஜெயந்தி விழாவில் விதிகளை மீறிய, வாகனங்களை மாவட்ட காவல்துறை பறிமுதல்…

ByKalamegam Viswanathan

Nov 21, 2023

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்த போது,

“மருதுபாண்டியர் மற்றும் தேவர் ஜெயந்தி விழாக்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 70 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 70 நான்கு சக்கர வாகனங்களில் 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது, வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், பொதுமக்கள் அச்சுறுத்தல் செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

6 தனிப்படைகள் அமைத்து தமிழகம் முழுதும் வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. 63 வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ்சை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி எடுத்து கொள்ள வேண்டும்” என கூறினார், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மூலமாக “FOLLOW TRAFFIC RULES” என்ற வாசக வடிவில் நிறுத்தி வைத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *