• Sun. Apr 28th, 2024

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது போராளியாக தெரிந்த விவசாயி..இன்று முதலமைச்சர் கண்ணுக்கு தீவிரவாதியாக தெரிகிறதா..?முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

Byவிஷா

Nov 22, 2023

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது 40இ000 போராட்டம் நடைபெற்றபோது பாதுகாப்பு வழங்கி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தார் அதுதான் உண்மையான ஜனநாயகம் என முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றிய அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். மதுரை மேற்கு அமமுக ஒன்றிய செயலாளர் வயலூர் எம்.சுரேஷ், அதலை ஊராட்சி செயலாளர் அன்புவேலன், வயலூர் ஊராட்சி செயலாளர் வினோத்குமார், அதலை கிளைச் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.மகேந்திரன், மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், தனராஜன் ராமகிருஷ்ணன், சி முருகன், தமிழழகன்,ராமசாமி, ராமையா, செல்லம்பட்டி ராஜா, திருப்பதி, பூமா ராஜாஇசுதாகரன் உட்பட பங்கேற்றனர்

பின்னர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது..,
 விடியா திமுக ஆட்சியிலே, மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பங்களை அனுபவித்து வருகிற அந்த வேதனை கண்ணீர் கதைகளை எல்லாம்  விவாதித்து வருகின்றோம். இன்றைக்கு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா கிராமத்திலே தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையப்படுத்தஇ அரசு முடிவு எடுத்ததன் அடிப்படையிலே,  எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்கள் தொடர்ந்து போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிலே 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து. இதில் அருள் ஆறுமுகத்தை தவிர ஆறு பேர் மீதான கொண்ட குண்டர் சட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. 
எடப்பாடியார்  இது குறித்து 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று திமுக அரசை வலியுறுத்தியும், கண்டன அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து 24 மாவட்டங்களில் விவசாயிகள் திமுக அரசினுடைய பச்சோந்தித்தனத்தை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார். போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தை குறைக்க வேண்டும் என்றும் அதனுடைய ஆர்ப்பாட்டத்தை தடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளிலே அந்த பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாய பெருங்குடி மக்கள் மீதும் விடியா திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்து வருகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வழக்குகளை காரணம் காட்டி எந்த விதமான வழக்குகள் இல்லாத விவசாயின் மீது தொடர் வழக்குகளை பதிவு செய்து வருவது வேதனையின் வேதனையாக இருக்கிறது. ஏதோ திருவண்ணாமலை மாவட்டத்தை தமிழ்நாட்டில் இருந்து எல்லை பகுதியை பிரிப்பதை போன்று அந்த காட்சி வேதனையான காட்சியாக இருக்கிறது. பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களை எல்லாம் கொண்டு வந்து நிறுத்தி விவசாய பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு தவறான முறைகளை கையாண்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது பல அமைப்புகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு தவறான பொய்யான தகவல்களை எல்லாம் வெளியிட்டு அன்றைக்கு  அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்றாலும் அந்த போராட்டங்களுக்கு அனுமதி வழங்கி காவல்துறை பாதுகாப்பு வழங்கினார் எடப்பாடியார். 
 ஆனால் இன்றைக்கு இருக்கிற திமுக அரசு விவசாயிகளுடைய போராட்டத்திற்கான  காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளுடைய  போராட்டங்களை எல்லாம் ஒடுக்குவதற்கு காவல் துறையை தொடர்ந்து ஏவல் துறையாக பயன்படுத்தி வருவது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பின் வரிசையில் அமர்ந்து அருள் ஆறுமுகம் போராளியாக கண்ணுக்குத் தெரிந்தார. ஆனால் இன்றைக்கு ஆளும் திமுககட்சிக்கு  தீவிரவாதியாக தெரிகிறது இதன் மூலம்  திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களேஇ யார் உங்களுக்கு போராளியாக தெரிந்தாரோ அவர் இன்றைக்கு உங்களுக்கு தீவிரவாதியாக தெரிகிறார் என்று சொன்னால் மாமியார் உடைத்தால் மண் குடம்இ மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போல் உள்ளது.
எடப்பாடியார் ஆட்சி காலத்திலே  இரு போக விவசாயம் நடைபெற்று வந்தாலும்இ அந்த நிலங்கள் விவசாய பணிகளுக்கு பயன்படக்கூடிய நிலமாக இருந்தாலும்இ நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை  கைவிட்டு திட்டங்களையும் ரத்து செய்து இருக்கிறார்கள் அதற்கு பல உதாரணங்கள் உள்ளது.
 திருமங்கலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டையில் பொன் விளையும் பூமியிலே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது அம்மா  எதிர்கட்சி தலைவராக இருந்து மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக வந்ததற்கு பின்னாலே அம்மாவுடைய கனவை நினைவாக்கத்த வகையில் இந்த மக்களுடைய கோரிக்கையை நான்  எடப்பாடியார் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். தொழிற்பேட்டை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டு விவசாயிகளுடைய வாழ்விலே ஒளியேற்றி  வைத்தார்.
உச்சநீதிமன்றம் வரை  எல்லாம் போராடினார்கள். அனைத்து கட்சிகள் போராடினாலும் கூட அதற்கு தீர்வு கண்டவர் எடப்பாடியார். அதனால் தான் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள் பேசுகிறார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார்  வருவார் அப்போது விவசாயிகளுடைய எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வகையில் இந்த திட்டங்களையே ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை விவசாயிகள் விரும்புகிற நடவடிக்கைகளை எடுப்பார்.

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது 40,000 போராட்டம் நடைபெற்றது அதற்கு பாதுகாப்பு, அனுமதி வழங்கி நியாயமான கோரிக்கைகளாக இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுத்தார். அதுதான் மக்களுடைய எதிர்பார்ப்பு அதுதான் உண்மையான ஜனநாயகம்.

தன்னுடைய விலை நிலங்களை அபகரிக்கிற அந்த நிலையில் அதை கண்டித்து போராடும் மக்களை அரசு இரும்பு கரம் கொண்டு தடுப்பது என்பது வேதனையாக இருக்கிறது.

போராட்டத்தால் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க முடியும் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும் அந்த அடிப்படை உரிமைகளை கூட இந்த அரசு கொடுக்க மறுக்கிறது என்று சொன்னால் இந்த கொடுங்கோல் ஆட்சி நீண்ட நாள் இந்த தமிழகத்திலே இருக்காது என்பது விவசாயிகளுடைய சாபமாக இருக்கிறது.

மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்று விவசாயிகளின் கோரிக்கைகள் எல்லாம் கனியோடு பரிசீலனை செய்து நியாயத்தின் பக்கம் நின்று அதற்கு தீர்ப்பு வழங்குவார் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *