• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஓடிடியில் வெளியானது சித்தார்த்தின் ‘மஹா சமுத்திரம்’

Byமதி

Nov 15, 2021

நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் நடித்த ‘மஹா சமுத்திரம்’ ஆயுதபூஜையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.

அனு இமானுவேல், அதிதி ராவ் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். ‘கேஜிஃப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தை, சூப்பர் ஹிட் அடித்த ‘ஆர்.எக்ஸ் 100’ இயக்குநர் அஜய் பூபதி இயக்கியிருந்தார்.

மஹா சமுத்திரம் படம் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது 1 மாதம் ஆனதால் நெட்ஃப்ளிக்ஸில் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.