• Fri. Apr 19th, 2024

வெளியானது ‘ஓமிக்ரான்’ மாறுபாட்டின் முதல் படம்

Byமதி

Nov 29, 2021

ரோமில் உள்ள பாம்பினோ கெசு என்ற மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் முதல் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள் இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம், எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் புரதம் இந்த ஒமிக்ரானில் ஒரு பகுதியில் குவிந்துள்ளது.

இந்த மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை என்று இப்போதே சொல்லிவிட முடியாது. இது குறைவான ஆபத்தினை உடையதா அல்லது அதிகம் ஆபத்தானதா என்பதை இனிவரும் ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கும்” என்று தெரிவித்தனர்.

மேலும், “போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் இருந்து கிடைக்கப்பெற்ற இந்த புதிய ஒமிக்ரான் மாறுபாடு பற்றிய ஆய்வில் இருந்து இந்த படம் தயாரிக்கப்பட்டது.

அனைத்து மாறுபாடுகளின் வரைபடத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படம் உள்ளது. இந்த பிறழ்வுகளானது பரிமாற்றத்தில் அல்லது தடுப்பூசிகளின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறிவதே இப்போது முக்கியம்” தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *