கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மும்பை,டெல்லி, கல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் தினசரி 40க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களும் குறிப்பாக வடமாநில மக்கள் ரயில் மூலமாக நாகர்கோவில் வந்து செல்கின்றனர்.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வெளிபகுதியில் பொதுக்கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் ரயிலில் வருகின்ற பயணிகளை அழைத்துச் செல்ல வருபவர்கள் பல மணி நேரம் வாகனங்களில் வந்து ஒரு காத்து நிற்கும்போது, பொதுக் கழிப்பிட வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பொது கழிப்பிட வசதியை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுக்க முன்வராததால், இதனால் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் முன்வந்து பொது கழிப்பிட கட்டிடத்தை கட்டி கொடுத்து.
கடந்த ஜனவரி மாதம் கட்டிட பணிகள் முடிவடைந்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஆனாலும் இதுவரை அந்த கட்டடத்தை ரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் பயன்படுத்தாமல் உள்ளதாக குற்றம் சாட்டி உடனே இந்த பொதுக் கழிப்பிடத்தை திறக்க ரயில்வே துறை முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். மேலும் திறக்க முன்வராவிட்டால் விரைவில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.