

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள மகிபாலன்பட்டி விளக்கு ரோட்டில் எஸ் எஸ் கோட்டை ஊராட்சியில் உள்ள சிட்டபட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் காளிமுத்து வயது 25 என்பவர், பொன்னமராவதி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள பனை மரத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் விபத்துக்குள்ளானார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக நெற்குப்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த காவல் ஆய்வாளர் செல்வகுமாரி சுயநினைவற்ற நிலையில் இருந்த காளிமுத்துவை மீட்டு அருகே உள்ள பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் . விபத்துக்குள்ளான காளிமுத்து ஆ.தெக்கூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
