வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.
இதனையடுத்து, தற்போது 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி என்பவர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐகோர்ட் மதுரைக் கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கேவியட் மனு என்பது தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு.
எனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.