• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சார்பு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் வால்பாறை மெயின் ரோடு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவில் அருகில் TN 41 M 2675 Maruti Suzuki WagonR four wheeler காரை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் பொதுவிநியோக ரேஷன் அரிசி 50 கிலோ எடை கொண்ட 24 சாக்கு மூட்டைகளில் சுமார் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மேலும் வாகன ஓட்டுநர் கேரளா மாநிலம் சித்தூர் பாலக்காடு சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை கைது செய்து வாகனம் மற்றும் அரிசி எதிரிய நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.