ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது.
அதில் பயனர்கள் உடனடியாக ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது. முதலில் இது ஹேக்கர்களிடம் இருந்து வந்த போலி மெயிலாக இருக்கலாம் என பலரும் சந்தேகித்த நிலையில், இந்த இ-மெயில் உண்மையில் ஃபேஸ்புக்கில் இருந்து தான் அனுப்பப்பட்டது என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.ஃபேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதால் இவ்வாறு இ-மெயில் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் புரொடக்ட்டை ஆன் செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு அந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் நபர்கள் நீண்ட நாட்களாக கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்படுகிறது.காரணம் அவர்கள் கணக்கை ஹேக் செய்வது மூலம் நீண்ட நபர்களை எளிதாக சென்றடையும் அபாயம் இருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.